குர்ஆன் 16:106 — தேனீ
விசுவாசத்தை அடைந்து விட்ட பின்னர், கடவுள் மீது நம்பிக்கை கொள்ள மறுப்பவர்கள், மேலும் நம்ப மறுப்பதில் முற்றிலும் திருப்தி அடைந்து விட்டவர்கள், கடவுள்-ன் கடுங் கோபத்திற்கு உள்ளாகி விட்டனர். தங்களுடைய இதயங்கள் விசுவாசத்தால் நிரம்பி இருக்கும் நிலையில், நம்பமறுத்தலை வெளிப்படையாக சொல்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் மட்டுமே பிழை பொறுக்கப்படுவார்கள்*.
[16:105] பொய்யான கோட்பாடுகளை இட்டுக் கட்டு பவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளில் நம்பிக்கை கொள்ளாதவர்கள் மட்டுமே; அவர்கள் தான் உண்மையான பொய்யர்கள்.
[16:107] இது ஏனெனில், அவர்கள் மறுவுலகத்தை விட மேலாக இந்த வாழ்விற்கு முன்னுரிமை கொடுத்துவிட்டனர், மேலும் கடவுள் இத்தகைய நம்பமறுக்கும் மக்களை வழிநடத்துவதில்லை.