குர்ஆன் 16:116 — தேனீ
பொய்களை இட்டுக்கட்டி மேலும் அவற்றைக் கடவுள் மீது சாட்டுவதற்காக: “இது அனுமதிக்கப்பட்டது, மேலும் இது அனுமதிக்கப்படாதது,” எனக் கூறியவாறு உங்களுடைய சொந்த நாவுகளால் நீங்கள் பொய்களைச் சொல்ல வேண்டாம். நிச்சயமாக, பொய்களை இட்டுக்கட்டி அவற்றைக் கடவுள் மீது சாட்டுபவர்கள் ஒரு போதும் வெற்றியடைய மாட்டார்கள்.
[16:115] செத்த பிராணிகள், இரத்தம், பன்றியின் இறைச்சி* மற்றும் கடவுள்-ஐ விடுத்து மற்றவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உணவு ஆகியவற்றை மட்டுமே அவர் உங்களுக்குத் தடை செய்கின்றார். வேண்டுமென்றோ அல்லது தீய எண்ணமோ இல்லாதிருந்து (இவற்றை உண்ணும்படி) ஒருவர் நிர்ப் பந்திக்கப்பட்டால், அப்போது கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[16:117] குறுகிய காலம் அவர்கள் சுகமனுபவிக் கின்றனர், பின்னர் வலிமிகுந்ததொரு தண்டனையை அனுபவிப்பார்கள்.