குர்ஆன் 16:117 — தேனீ
குறுகிய காலம் அவர்கள் சுகமனுபவிக் கின்றனர், பின்னர் வலிமிகுந்ததொரு தண்டனையை அனுபவிப்பார்கள்.
[16:116] பொய்களை இட்டுக்கட்டி மேலும் அவற்றைக் கடவுள் மீது சாட்டுவதற்காக: “இது அனுமதிக்கப்பட்டது, மேலும் இது அனுமதிக்கப்படாதது,” எனக் கூறியவாறு உங்களுடைய சொந்த நாவுகளால் நீங்கள் பொய்களைச் சொல்ல வேண்டாம். நிச்சயமாக, பொய்களை இட்டுக்கட்டி அவற்றைக் கடவுள் மீது சாட்டுபவர்கள் ஒரு போதும் வெற்றியடைய மாட்டார்கள்.
[16:118] *இதற்கு முன்னர் உமக்கு நாம் விவரித்த வற்றை, யூதர்களுக்கு நாம் தடை செய்திருந் தோம். அவர்களுக்கு அநீதமிழைத்தவர்கள் நாம் அல்ல; அவர்கள்தான் தங்களுடைய சொந்த ஆன்மாக்களுக்கே அநீதமிழைத்துக் கொண்டனர்.