குர்ஆன் 16:118 — தேனீ
*இதற்கு முன்னர் உமக்கு நாம் விவரித்த வற்றை, யூதர்களுக்கு நாம் தடை செய்திருந் தோம். அவர்களுக்கு அநீதமிழைத்தவர்கள் நாம் அல்ல; அவர்கள்தான் தங்களுடைய சொந்த ஆன்மாக்களுக்கே அநீதமிழைத்துக் கொண்டனர்.
[16:117] குறுகிய காலம் அவர்கள் சுகமனுபவிக் கின்றனர், பின்னர் வலிமிகுந்ததொரு தண்டனையை அனுபவிப்பார்கள்.
[16:119] இருப்பினும், அறியாமையினால் பாவத்தில் வீழ்ந்து விட்டு அதன்பின்னர் அதற்காக வருந்தித் திருந்தி மேலும் சீர்திருத்திக்கொள்வோரைக் குறித்து, உமது இரட்சகர், இவ்வாறு செய்யப் பட்டுவிட்ட பின்னரும், மன்னிப்பவராகவும், மிக்க கருணையாளராகவும் இருக்கின்றார்.