Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:127 — தேனீ

நீங்கள் பொறுமையை மேற்கொள்ள வேண்டும் - மேலும் உங்களுடைய பொறுமை கடவுள்-ன் உதவியைக் கொண்டு மட்டுமே நிறைவு அடையக்கூடியதாக உள்ளது. அவர்களுக் காகக் கவலைப்படாதீர், மேலும் அவர்களுடைய சூழ்ச்சிகளால் வருத்தமும்படாதீர்.

[16:126] மேலும் நீங்கள் தண்டித்தால், ஒரு சமமான அளவு தண்டனையைக் கொண்டே தண்டிக்க வேண்டும். ஆனால் நீங்கள் (பழி தீர்ப்பதற்குப் பதிலாக) பொறுமையைக் கடைப்பிடித்தால், பொறுமையோடிருப்பவர்களுக்கு அதுவே மேலானதாக இருக்கும்.

[16:128] நன்னெறியானதொரு வாழ்வு நடத்து வோருடனும், மேலும் தர்மவான்களுடனும் கடவுள் இருக்கின்றார்.