குர்ஆன் 16:126 — தேனீ
மேலும் நீங்கள் தண்டித்தால், ஒரு சமமான அளவு தண்டனையைக் கொண்டே தண்டிக்க வேண்டும். ஆனால் நீங்கள் (பழி தீர்ப்பதற்குப் பதிலாக) பொறுமையைக் கடைப்பிடித்தால், பொறுமையோடிருப்பவர்களுக்கு அதுவே மேலானதாக இருக்கும்.
[16:125] ஞானத்துடனும், கனிவான உபதேசத்துடனும் உமது இரட்சகரின் பாதையை நோக்கி நீங்கள் அழைக்க வேண்டும், மேலும் இயன்றவரை மிகச்சிறந்த முறையில் அவர்களுடன் விவாதம் செய்யுங்கள். உமது இரட்சகர் அவருடைய வழியிலிருந்து தவறியவர் யார் என்பதை நன்கறிவார், மேலும் வழிநடத்தப்பட்டவர்கள் யார் என்பதையும் அவர் நன்கறிவார்.
[16:127] நீங்கள் பொறுமையை மேற்கொள்ள வேண்டும் - மேலும் உங்களுடைய பொறுமை கடவுள்-ன் உதவியைக் கொண்டு மட்டுமே நிறைவு அடையக்கூடியதாக உள்ளது. அவர்களுக் காகக் கவலைப்படாதீர், மேலும் அவர்களுடைய சூழ்ச்சிகளால் வருத்தமும்படாதீர்.