குர்ஆன் 16:125 — தேனீ
ஞானத்துடனும், கனிவான உபதேசத்துடனும் உமது இரட்சகரின் பாதையை நோக்கி நீங்கள் அழைக்க வேண்டும், மேலும் இயன்றவரை மிகச்சிறந்த முறையில் அவர்களுடன் விவாதம் செய்யுங்கள். உமது இரட்சகர் அவருடைய வழியிலிருந்து தவறியவர் யார் என்பதை நன்கறிவார், மேலும் வழிநடத்தப்பட்டவர்கள் யார் என்பதையும் அவர் நன்கறிவார்.
[16:124] ஸப்பத்தைக்குறித்துத் தர்க்கித்துக் கொண்ட வர்களாக முடிந்து போனவர்களுக்கு (யூத, கிறிஸ்தவர்களுக்கு) மட்டுமே அது விதிக்கப் பட்டது. அவர்களுடைய தர்க்கங்கள் குறித்து மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று தீர்ப்பளிக்கப் போகின்றவர் உமது இரட்சகர் தான்.
[16:126] மேலும் நீங்கள் தண்டித்தால், ஒரு சமமான அளவு தண்டனையைக் கொண்டே தண்டிக்க வேண்டும். ஆனால் நீங்கள் (பழி தீர்ப்பதற்குப் பதிலாக) பொறுமையைக் கடைப்பிடித்தால், பொறுமையோடிருப்பவர்களுக்கு அதுவே மேலானதாக இருக்கும்.