குர்ஆன் 16:124 — தேனீ
ஸப்பத்தைக்குறித்துத் தர்க்கித்துக் கொண்ட வர்களாக முடிந்து போனவர்களுக்கு (யூத, கிறிஸ்தவர்களுக்கு) மட்டுமே அது விதிக்கப் பட்டது. அவர்களுடைய தர்க்கங்கள் குறித்து மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று தீர்ப்பளிக்கப் போகின்றவர் உமது இரட்சகர் தான்.
[16:123] பின்னர் நாம் (முஹம்மதே) உமக்கு ஏகத்துவ வாதியான, ஆப்ரஹாமின்* மார்க்கத்தைப் பின்பற்றும்படி உள்ளுணர்வூட்டினோம்; அவர் ஒரு போதும் இணைத்தெய்வங்களை வழி பட்டவராக இருந்ததில்லை.
[16:125] ஞானத்துடனும், கனிவான உபதேசத்துடனும் உமது இரட்சகரின் பாதையை நோக்கி நீங்கள் அழைக்க வேண்டும், மேலும் இயன்றவரை மிகச்சிறந்த முறையில் அவர்களுடன் விவாதம் செய்யுங்கள். உமது இரட்சகர் அவருடைய வழியிலிருந்து தவறியவர் யார் என்பதை நன்கறிவார், மேலும் வழிநடத்தப்பட்டவர்கள் யார் என்பதையும் அவர் நன்கறிவார்.