குர்ஆன் 16:26 — தேனீ
அவர்களைப் போன்ற மற்றவர்களும், கடந்த காலத்தில் சூழ்ச்சிகள் செய்தனர், மேலும் அதன் விளைவாக, கடவுள் அவர்களுடைய கட்டடத்தை அஸ்திவாரத்தோடு அழித்து விட்டார், அதன் முகடுகளை அவர்கள் மீது விழச் செய்தார். அவர்கள் சற்றும் எதிர்பாராத போது தண்டனை அவர்களைத் தாக்கியது.
[16:25] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று, அவர்களுடைய பாவங்களுக்கும் அத்துடன் கூடுதலாக, அவர்களுடைய அறியாமை யினால் அவர்கள் வழிதவறச் செய்தவர்களின் பாவங்களுக்கும் சேர்த்து, அவர்கள் அனைவரும் பொறுப்பாக்கப் படுவார்கள். எத்தகையதொரு துக்ககரமான சுமை!
[16:27] பின்னர், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று, அவர்களை அவர் அவமானப் படுத்துவார், மேலும் “எவர்களுக்காக என்னை எதிர்த்தீர்களோ, என்னுடன் நீங்கள் அமைத்துக் கொண்ட அந்த என்னுடைய பங்குதாரர்கள் எங்கே?” என்று கேட்பார். அறிவைக் கொண்டு அருள்பாலிக்கப்பட்டவர்கள், “ இன்றைய தினம், நம்ப மறுப்பவர்கள் மீது இழிவும் துன்பமும் ஏற்பட்டு விட்டது” என்று கூறுவார்கள்.