குர்ஆன் 16:25 — தேனீ
மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று, அவர்களுடைய பாவங்களுக்கும் அத்துடன் கூடுதலாக, அவர்களுடைய அறியாமை யினால் அவர்கள் வழிதவறச் செய்தவர்களின் பாவங்களுக்கும் சேர்த்து, அவர்கள் அனைவரும் பொறுப்பாக்கப் படுவார்கள். எத்தகையதொரு துக்ககரமான சுமை!
[16:24] “உங்கள் இரட்சகரிடமிருந்து வந்துள்ள இந்த வெளிப்பாடுகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்,” என்று அவர்களிடம் கேட்கப்படும் பொழுது, “கடந்த காலத்தின் கட்டுக்கதைகள்” என்று அவர்கள் கூறு கின்றனர்.
[16:26] அவர்களைப் போன்ற மற்றவர்களும், கடந்த காலத்தில் சூழ்ச்சிகள் செய்தனர், மேலும் அதன் விளைவாக, கடவுள் அவர்களுடைய கட்டடத்தை அஸ்திவாரத்தோடு அழித்து விட்டார், அதன் முகடுகளை அவர்கள் மீது விழச் செய்தார். அவர்கள் சற்றும் எதிர்பாராத போது தண்டனை அவர்களைத் தாக்கியது.