குர்ஆன் 16:24 — தேனீ
“உங்கள் இரட்சகரிடமிருந்து வந்துள்ள இந்த வெளிப்பாடுகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்,” என்று அவர்களிடம் கேட்கப்படும் பொழுது, “கடந்த காலத்தின் கட்டுக்கதைகள்” என்று அவர்கள் கூறு கின்றனர்.
[16:23] நிச்சயமாக, அவர்கள் மறைக்கும் ஒவ்வொன் றையும் அவர்கள் வெளிப்படுத்தும் ஒவ்வொன் றையும் கடவுள் அறிகின்றார். ஆணவம் கொண்டவர்களை அவர் நேசிப்பதில்லை.
[16:25] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று, அவர்களுடைய பாவங்களுக்கும் அத்துடன் கூடுதலாக, அவர்களுடைய அறியாமை யினால் அவர்கள் வழிதவறச் செய்தவர்களின் பாவங்களுக்கும் சேர்த்து, அவர்கள் அனைவரும் பொறுப்பாக்கப் படுவார்கள். எத்தகையதொரு துக்ககரமான சுமை!