Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:28 — தேனீ

தங்களுடைய ஆன்மாக்களுக்குத் தீங் கிழைத்துக் கொண்டிருக்கும் ஒரு நிலையில் வானவர்கள் அவர்களை மரணத்தில் ஆழ்த்து வார்கள். இறுதியில் அப்போதுதான் அவர்கள் அடிபணிவார்கள், மேலும், ஆம் உண்மையில் “நாங்கள் தவறான எந்த ஒன்றையும் செய்ய வில்லை!” என்று கூறுவார்கள். கடவுள் நீங்கள் செய்து கொண்டிருந்த ஒவ்வொன் றையும் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.

[16:27] பின்னர், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று, அவர்களை அவர் அவமானப் படுத்துவார், மேலும் “எவர்களுக்காக என்னை எதிர்த்தீர்களோ, என்னுடன் நீங்கள் அமைத்துக் கொண்ட அந்த என்னுடைய பங்குதாரர்கள் எங்கே?” என்று கேட்பார். அறிவைக் கொண்டு அருள்பாலிக்கப்பட்டவர்கள், “ இன்றைய தினம், நம்ப மறுப்பவர்கள் மீது இழிவும் துன்பமும் ஏற்பட்டு விட்டது” என்று கூறுவார்கள்.

[16:29] ஆகையால், நரகத்தின் வாசல்களுக்குள் நுழையுங்கள், அங்கே நீங்கள் நிரந்தரமாகத் தங்கி இருப்பீர்கள். ஆணவம் கொண்டவர் களுக்கு என்ன ஒரு துன்பகரமான விதி.