குர்ஆன் 16:31 — தேனீ
ஏதேன் தோட்டங்கள் அவர்களுக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன, அங்கே ஆறுகள் ஓடும். அங்கே அவர்கள் விரும்புகின்ற எந்த ஒன்றும் அவர்களுக்கு உண்டு. கடவுள் இவ்விதமாக நன்னெறியாளர்களுக்கு வெகு மதியளிக்கின்றார்.
[16:30] நன்னெறியாளர்களைப் பொறுத்தவரை, “உங்கள் இரட்சகரிடமிருந்து வந்துள்ள இந்த வெளிப்பாடுகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்” என்று அவர்களிடம் கேட்கப்படும் பொழுது அவர்கள், “ நல்லது” என்று கூறுவார்கள். நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோருக்கு, மகிழ்ச்சி, மேலும் மறுவுலகின் வீடானது இன்னும் மிக மேலானது. நன்னெறியாளர்களுக்கு என்ன ஒரு பேரானந்த மயமான வீடு.
[16:32] வானவர்கள், “உங்கள் மீது அமைதி நிலவுவதாக. உங்களுடைய காரியங்களுக்கு வெகுமதியாக* (இப்போது) சுவனத்தில் நுழையுங்கள்” என்று கூறியவாறு, நன்னெறி யோடிருக்கும் ஒரு நிலையில் அவர்களுடைய வாழ்வுகளை முடிவிற்குக் கொண்டு வருவார்கள்.