குர்ஆன் 16:35 — தேனீ
இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்கள், “கடவுள் நாடியிருந்தால், நாங்களோ அல்லது எங்கள் பெற்றோர்களோ,அவருடன் எந்த இணைத் தெய்வங்களையும் வழிபட்டிருக்க மாட்டோம், அன்றி அவர் தடுத்தவற்றை தவிர வேறெதையும் தடுத்திருக்க மாட்டோம்” என்று கூறுகின்றனர். அவர்களுக்கு முன்னிருந்தவர் களும் இதனையே செய்தனர். முழுமையான தூதுச் செய்தியை ஒப்படைப்பதைத் தவிர தூதர்கள் வேறெதையும் செய்ய முடியுமா?
[16:34] அவர்களுடைய பாவமான காரியங்களின் பின்விளைவுகளுக்கு அவர்கள் உள்ளானார் கள், மேலும் அவர்கள் பரிகசித்த அதே விஷயங்கள் திரும்பி வந்து அவர்களை மீண்டும் மீண்டும் அவதிக்குள்ளாக்கியது.
[16:36] “ நீங்கள் கடவுள்-ஐ வழிபட வேண்டும், மேலும் இணைத்தெய்வவழிபாட்டைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்,” எனக் கூறியவராக, ஒரு தூதரை ஒவ்வொரு சமூகத்திற்கும் நாம் அனுப்பினோம். அதனைத் தொடர்ந்து, சிலர் கடவுள்-ஆல் வழிநடத்தப்பட்டனர், அதே சமயம்,மற்றவர்கள் வழிதவறும்படிச் செய்யப் பட்டனர். பூமியில் சுற்றித் திரிந்து, ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களுக்கு ஏற்பட்ட விளைவுகளைக் கவனித்துப் பாருங்கள்.