Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:37 — தேனீ

அவர்களை வழிநடத்துவதற்காக நீர் எவ்வளவு கஷ்டப்பட்டு முயற்சி செய்தாலும் ஒரு பொருட்டல்ல, கடவுள்-ஆல் வழிதவறும்படிச் செய்யப்பட்டவர்களை அவர் வழிநடத்த மாட்டார். இவ்விதமாக, எவராலும் அவர் களுக்கு உதவி செய்ய இயலாது.

[16:36] “ நீங்கள் கடவுள்-ஐ வழிபட வேண்டும், மேலும் இணைத்தெய்வவழிபாட்டைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்,” எனக் கூறியவராக, ஒரு தூதரை ஒவ்வொரு சமூகத்திற்கும் நாம் அனுப்பினோம். அதனைத் தொடர்ந்து, சிலர் கடவுள்-ஆல் வழிநடத்தப்பட்டனர், அதே சமயம்,மற்றவர்கள் வழிதவறும்படிச் செய்யப் பட்டனர். பூமியில் சுற்றித் திரிந்து, ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களுக்கு ஏற்பட்ட விளைவுகளைக் கவனித்துப் பாருங்கள்.

[16:38] “மரணித்தவர்களைக் கடவுள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பமாட்டார்” என்று அவர்கள் கடவுள் மீது முறைப்படிச் சத்தியம் செய்தனர். நிச்சயமாக, மீறமுடியாத அவருடைய வாக்குறுதி இவ்வாறானதே, ஆனால் பெரும்பாலான மனிதர்கள் அறியமாட்டார்கள்.