குர்ஆன் 16:38 — தேனீ
“மரணித்தவர்களைக் கடவுள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பமாட்டார்” என்று அவர்கள் கடவுள் மீது முறைப்படிச் சத்தியம் செய்தனர். நிச்சயமாக, மீறமுடியாத அவருடைய வாக்குறுதி இவ்வாறானதே, ஆனால் பெரும்பாலான மனிதர்கள் அறியமாட்டார்கள்.
[16:37] அவர்களை வழிநடத்துவதற்காக நீர் எவ்வளவு கஷ்டப்பட்டு முயற்சி செய்தாலும் ஒரு பொருட்டல்ல, கடவுள்-ஆல் வழிதவறும்படிச் செய்யப்பட்டவர்களை அவர் வழிநடத்த மாட்டார். இவ்விதமாக, எவராலும் அவர் களுக்கு உதவி செய்ய இயலாது.
[16:39] பின்னர் அவர்கள் தர்க்கித்துக் கொண்ட எல்லா விஷயங்களையும் ஒவ்வொருவருக்கும் அவர் சுட்டிக் காட்டுவார், மேலும் அவர்கள் பொய்யர் களாக இருந்தனர் என்று நம்பமறுத்தவர்களை அறிந்து கொள்ளச்செய்வார்.