குர்ஆன் 16:39 — தேனீ
பின்னர் அவர்கள் தர்க்கித்துக் கொண்ட எல்லா விஷயங்களையும் ஒவ்வொருவருக்கும் அவர் சுட்டிக் காட்டுவார், மேலும் அவர்கள் பொய்யர் களாக இருந்தனர் என்று நம்பமறுத்தவர்களை அறிந்து கொள்ளச்செய்வார்.
[16:38] “மரணித்தவர்களைக் கடவுள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பமாட்டார்” என்று அவர்கள் கடவுள் மீது முறைப்படிச் சத்தியம் செய்தனர். நிச்சயமாக, மீறமுடியாத அவருடைய வாக்குறுதி இவ்வாறானதே, ஆனால் பெரும்பாலான மனிதர்கள் அறியமாட்டார்கள்.
[16:40] எந்த விஷயத்தையும் செய்து முடிக்க, அதனை நோக்கி நாம், “ஆகு” என்று கூறுவோம், அவ்வளவுதான், அது ஆகிவிடும்.