குர்ஆன் 16:56 — தேனீ
அவர்களுக்கு நாம் வழங்குகின்ற வாழ்வாதா ரங்களின் ஒரு பங்கை, அறியாமையினால் அவர்கள் அமைத்துக் கொண்ட இணைத் தெய்வங் களுக்காக, அவர்கள் நிர்ணயம் செய்கின்றனர். கடவுள் மீது ஆணையாக, உங்களுடைய புதுமைகளுக்கு விளக்கம் தருமாறு நீங்கள் பிடிக்கப்படுவீர்கள்.
[16:55] அவர்களுக்கு நாம் கொடுத்தவற்றில் அவர்கள் நம்பிக்கை கொள்ள மறுக்கட்டும். தற்காலிக மாகச் சுகமனுபவிக்கச் செல்லுங்கள்; நீங்கள் நிச்சயமாகக் கண்டு கொள்வீர்கள்.
[16:57] அவர்கள் கடவுள்-க்கு மகள்களையும் நியமிக் கின்றார்கள், அவர் துதிப்பிற்குரியவர், அதே சமயம் அவர்களுக்குப் பிரியமான வற்றையே அவர்கள் தங்களுக்கென விரும்பி எடுத்துக் கொள்கின்றனர்.