குர்ஆன் 16:64 — தேனீ
அவர்கள் தர்க்கித்துக் கொண்டவற்றை அவர்களுக்குச் சுட்டிக்காட்டுவதற்காகவும், மேலும் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் அருளை வழங்குவதற் காகவும், இவ்வேதத்தை நாம் உமக்கு வெளிப்படுத்தி உள்ளோம்.
[16:63] கடவுள் மீது ஆணையாக, உமக்கு முன்னி ருந்த சமூகங்களுக்கு நாம் (தூதர்களை) அனுப்பியிருக்கின்றோம், ஆனால் சாத்தான் அவர்களுடைய கண்களுக்கு அவர்களுடைய காரியங்களை அழகாக்கி விட்டான். அதன் விளைவாக, அவன்தான் இப்போது அவர் களுடைய எஜமானன், மேலும் அவர்கள் வலிமிகுந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.
[16:65] கடவுள் நிலத்தை, அது இறந்து விட்ட பின்னர் மீண்டும் உயிர்ப்பிப்பதற்காக விண்ணிலிருந்து தண்ணீரை இறக்கி அனுப்புகின்றார். செவி யேற்கும் மக்களுக்கு இது (போதிய) சான்றாக இருக்க வேண்டும்.