குர்ஆன் 16:65 — தேனீ
கடவுள் நிலத்தை, அது இறந்து விட்ட பின்னர் மீண்டும் உயிர்ப்பிப்பதற்காக விண்ணிலிருந்து தண்ணீரை இறக்கி அனுப்புகின்றார். செவி யேற்கும் மக்களுக்கு இது (போதிய) சான்றாக இருக்க வேண்டும்.
[16:64] அவர்கள் தர்க்கித்துக் கொண்டவற்றை அவர்களுக்குச் சுட்டிக்காட்டுவதற்காகவும், மேலும் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் அருளை வழங்குவதற் காகவும், இவ்வேதத்தை நாம் உமக்கு வெளிப்படுத்தி உள்ளோம்.
[16:66] மேலும் கால்நடைகளிலும் உங்களுக்கு ஒரு படிப்பினை உள்ளது: அவற்றின் வயிறுகளி லிருந்து ஒரு பானத்தை உங்களுக்கு நாம் வழங்குகின்றோம். ஜீரணித்துவிட்ட உணவிற் கும் இரத்தத்திற்கும் நடுவிலிருந்து, அருந்து வோருக்குச் சுவை மிகுந்த, தூய்மையான பால் உங்களுக்குக் கிடைக்கின்றது.