குர்ஆன் 16:66 — தேனீ
மேலும் கால்நடைகளிலும் உங்களுக்கு ஒரு படிப்பினை உள்ளது: அவற்றின் வயிறுகளி லிருந்து ஒரு பானத்தை உங்களுக்கு நாம் வழங்குகின்றோம். ஜீரணித்துவிட்ட உணவிற் கும் இரத்தத்திற்கும் நடுவிலிருந்து, அருந்து வோருக்குச் சுவை மிகுந்த, தூய்மையான பால் உங்களுக்குக் கிடைக்கின்றது.
[16:65] கடவுள் நிலத்தை, அது இறந்து விட்ட பின்னர் மீண்டும் உயிர்ப்பிப்பதற்காக விண்ணிலிருந்து தண்ணீரை இறக்கி அனுப்புகின்றார். செவி யேற்கும் மக்களுக்கு இது (போதிய) சான்றாக இருக்க வேண்டும்.
[16:67] மேலும் பேரீத்த மரங்களின் பழங்கள் மற்றும் திராட்சைகளிலிருந்து மது வகைகளையும், அதே போல் நல்ல ஆகாரங்களையும் நீங்கள் தயாரிக்கின்றீர்கள். புரிந்து கொள்ளும் மக்களுக்கு இது (போதிய) சான்றாக இருக்க வேண்டும்.