குர்ஆன் 16:67 — தேனீ
மேலும் பேரீத்த மரங்களின் பழங்கள் மற்றும் திராட்சைகளிலிருந்து மது வகைகளையும், அதே போல் நல்ல ஆகாரங்களையும் நீங்கள் தயாரிக்கின்றீர்கள். புரிந்து கொள்ளும் மக்களுக்கு இது (போதிய) சான்றாக இருக்க வேண்டும்.
[16:66] மேலும் கால்நடைகளிலும் உங்களுக்கு ஒரு படிப்பினை உள்ளது: அவற்றின் வயிறுகளி லிருந்து ஒரு பானத்தை உங்களுக்கு நாம் வழங்குகின்றோம். ஜீரணித்துவிட்ட உணவிற் கும் இரத்தத்திற்கும் நடுவிலிருந்து, அருந்து வோருக்குச் சுவை மிகுந்த, தூய்மையான பால் உங்களுக்குக் கிடைக்கின்றது.
[16:68] இன்னும், உமது இரட்சகர் தேனீக்கு மலைகளிலும், மரங்களிலும், மேலும் அவர்கள் உனக்காகக் கட்டுகின்ற (செயற்கை தேன் கூடுகள் போன்ற) வற்றிலும் வீடுகளைக் கட்டிக்கொள் என்று உள்ளுணர்வூட்டினார்.