Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:68 — தேனீ

இன்னும், உமது இரட்சகர் தேனீக்கு மலைகளிலும், மரங்களிலும், மேலும் அவர்கள் உனக்காகக் கட்டுகின்ற (செயற்கை தேன் கூடுகள் போன்ற) வற்றிலும் வீடுகளைக் கட்டிக்கொள் என்று உள்ளுணர்வூட்டினார்.

[16:67] மேலும் பேரீத்த மரங்களின் பழங்கள் மற்றும் திராட்சைகளிலிருந்து மது வகைகளையும், அதே போல் நல்ல ஆகாரங்களையும் நீங்கள் தயாரிக்கின்றீர்கள். புரிந்து கொள்ளும் மக்களுக்கு இது (போதிய) சான்றாக இருக்க வேண்டும்.

[16:69] பின்னர், மிகத் துல்லியமாக, உன் இரட்சகரின் திட்டத்தைப் பின்பற்றி அனைத்துக் கனிகளில் இருந்தும் உண்டு கொள். அவற்றின் வயிறுகளில் இருந்து பல்வேறு நிறங்களை உடைய ஒரு பானம் வெளிவருகின்றது, அதில் மனிதர்களுக்கு நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற மக்களுக்கு இது (போதிய) சான்றாக இருக்கவேண்டும்*.