குர்ஆன் 16:69 — தேனீ
பின்னர், மிகத் துல்லியமாக, உன் இரட்சகரின் திட்டத்தைப் பின்பற்றி அனைத்துக் கனிகளில் இருந்தும் உண்டு கொள். அவற்றின் வயிறுகளில் இருந்து பல்வேறு நிறங்களை உடைய ஒரு பானம் வெளிவருகின்றது, அதில் மனிதர்களுக்கு நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற மக்களுக்கு இது (போதிய) சான்றாக இருக்கவேண்டும்*.
[16:68] இன்னும், உமது இரட்சகர் தேனீக்கு மலைகளிலும், மரங்களிலும், மேலும் அவர்கள் உனக்காகக் கட்டுகின்ற (செயற்கை தேன் கூடுகள் போன்ற) வற்றிலும் வீடுகளைக் கட்டிக்கொள் என்று உள்ளுணர்வூட்டினார்.
[16:70] கடவுள் உங்களைப் படைத்தார், பின்னர் அவர் உங்கள் வாழ்வுகளை முடிவிற்குக் கொண்டு வருகின்றார். தங்களால் அடைய இயலும் அறிவிற்கும் ஓர் எல்லை உண்டு என்பதைக் காண்பதற்காகவே, உங்களில் சிலரை, மிக முதிர்ந்த வயது வரை உயிர்வாழ அவர் அனுமதிக்கின்றார். கடவுள் எல்லாம் அறிந்த வர், சர்வ சக்தியுடையவர்.