Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:70 — தேனீ

கடவுள் உங்களைப் படைத்தார், பின்னர் அவர் உங்கள் வாழ்வுகளை முடிவிற்குக் கொண்டு வருகின்றார். தங்களால் அடைய இயலும் அறிவிற்கும் ஓர் எல்லை உண்டு என்பதைக் காண்பதற்காகவே, உங்களில் சிலரை, மிக முதிர்ந்த வயது வரை உயிர்வாழ அவர் அனுமதிக்கின்றார். கடவுள் எல்லாம் அறிந்த வர், சர்வ சக்தியுடையவர்.

[16:69] பின்னர், மிகத் துல்லியமாக, உன் இரட்சகரின் திட்டத்தைப் பின்பற்றி அனைத்துக் கனிகளில் இருந்தும் உண்டு கொள். அவற்றின் வயிறுகளில் இருந்து பல்வேறு நிறங்களை உடைய ஒரு பானம் வெளிவருகின்றது, அதில் மனிதர்களுக்கு நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற மக்களுக்கு இது (போதிய) சான்றாக இருக்கவேண்டும்*.

[16:71] கடவுள் உங்களில் சிலருக்கு மற்றவர்களை விட அதிகமாக வழங்கியிருக்கின்றார். அதிக மாகக் கொடுக்கப்பட்டவர்கள் தங்களுக்குக் கீழே உள்ளவர்களுக்கு அவர்களைப் பங்குதாரர்களாக்கிக் கொள்ளும் அளவிற்குத் தங்கள் உடமைகளை ஒருபோதும் கொடுத்து விடமாட்டார்கள். கடவுள்-ன் அருட் கொடைகளை அவர்கள் விட்டுக்கொடுத்து விடுவார்களா?*