Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:71 — தேனீ

கடவுள் உங்களில் சிலருக்கு மற்றவர்களை விட அதிகமாக வழங்கியிருக்கின்றார். அதிக மாகக் கொடுக்கப்பட்டவர்கள் தங்களுக்குக் கீழே உள்ளவர்களுக்கு அவர்களைப் பங்குதாரர்களாக்கிக் கொள்ளும் அளவிற்குத் தங்கள் உடமைகளை ஒருபோதும் கொடுத்து விடமாட்டார்கள். கடவுள்-ன் அருட் கொடைகளை அவர்கள் விட்டுக்கொடுத்து விடுவார்களா?*

[16:70] கடவுள் உங்களைப் படைத்தார், பின்னர் அவர் உங்கள் வாழ்வுகளை முடிவிற்குக் கொண்டு வருகின்றார். தங்களால் அடைய இயலும் அறிவிற்கும் ஓர் எல்லை உண்டு என்பதைக் காண்பதற்காகவே, உங்களில் சிலரை, மிக முதிர்ந்த வயது வரை உயிர்வாழ அவர் அனுமதிக்கின்றார். கடவுள் எல்லாம் அறிந்த வர், சர்வ சக்தியுடையவர்.

[16:72] மேலும் கடவுள் உங்களிலிருந்தே உங்களுடைய வாழ்க்கைத் துணைகளை ஆக்கினார், மேலும் உங்களுடைய வாழ்க்கைத் துணைகளிலிருந்து உங்களுக்குப் பிள்ளை களையும், பேரப்பிள்ளைகளையும் உண்டாக்கி னார், மேலும் நல்ல வாழ்வாதாரங்களைக் கொண்டு உங்களுக்கு வழங்கினார். பொய்மையில் நம்பிக்கை கொண்டு, மேலும் கடவுள்-ன் அருட்கொடைகளுக்கு நன்றி கெட்டவர்களாக அவர்கள் மாறலாமா?