Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:72 — தேனீ

மேலும் கடவுள் உங்களிலிருந்தே உங்களுடைய வாழ்க்கைத் துணைகளை ஆக்கினார், மேலும் உங்களுடைய வாழ்க்கைத் துணைகளிலிருந்து உங்களுக்குப் பிள்ளை களையும், பேரப்பிள்ளைகளையும் உண்டாக்கி னார், மேலும் நல்ல வாழ்வாதாரங்களைக் கொண்டு உங்களுக்கு வழங்கினார். பொய்மையில் நம்பிக்கை கொண்டு, மேலும் கடவுள்-ன் அருட்கொடைகளுக்கு நன்றி கெட்டவர்களாக அவர்கள் மாறலாமா?

[16:71] கடவுள் உங்களில் சிலருக்கு மற்றவர்களை விட அதிகமாக வழங்கியிருக்கின்றார். அதிக மாகக் கொடுக்கப்பட்டவர்கள் தங்களுக்குக் கீழே உள்ளவர்களுக்கு அவர்களைப் பங்குதாரர்களாக்கிக் கொள்ளும் அளவிற்குத் தங்கள் உடமைகளை ஒருபோதும் கொடுத்து விடமாட்டார்கள். கடவுள்-ன் அருட் கொடைகளை அவர்கள் விட்டுக்கொடுத்து விடுவார்களா?*

[16:73] இருப்பினும், வானங்களிலோ, அன்றி பூமியிலோ அவர்களுக்காக எந்த வாழ்வாதாரத் தையும் கொண்டிராத, அன்றியும் அவர்களுக்கு எந்த ஒன்றையும் கொண்டு வழங்க முடியா தவற்றைக் கடவுள்-உடன் அவர்கள் வழிபடு கின்றனர்.