குர்ஆன் 16:77 — தேனீ
வானங்கள் மற்றும் பூமியின் எதிர்காலம் கடவுள்-க்குரியது. அவரைப் பொறுத்த வரை, உலகின் முடிவு (அந்நேரம்) ஒரு கண் சிமிட்டலுக்கு அப்பால், அல்லது அதனை விடவும் மிக அருகில் உள்ளதைப் போன்ற தாகும். கடவுள் சர்வ சக்தியுடையவர்.
[16:76] மேலும் கடவுள் இரு மனிதர்களின் உதாரணத்தை எடுத்துரைக்கின்றார்: ஒருவன் ஊமை, எந்த விஷயத்தையும் செய்யும் திறனற்றவன், தனது எஜமானரை முற்றிலும் சார்ந்திருப்பவன் - எவ்விதமான வழியில் அவர் அவனைச் செலுத்தினாலும், நன்மையான எந்த ஒன்றையும் அவனால் கொண்டு வர முடியாது. நீதத்துடன் ஆட்சி செய்பவரும், மேலும் நேரான பாதையில் வழிநடத்தப்பட்டவருமாகிய ஒருவருக்கு அவன் சமமானவனா?
[16:78] எதையும் அறியாதவர்களாக உங்களை உங்கள் தாயார்களின் வயிறுகளில் இருந்து கடவுள் வெளியில் கொண்டு வந்தார், மேலும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைப் புலனையும், மற்றும் மூளைகளையும், நீங்கள் நன்றியுடையோராக இருக்கக் கூடும் என்பதற்காக அவர் வழங்கினார்.