குர்ஆன் 16:76 — தேனீ
மேலும் கடவுள் இரு மனிதர்களின் உதாரணத்தை எடுத்துரைக்கின்றார்: ஒருவன் ஊமை, எந்த விஷயத்தையும் செய்யும் திறனற்றவன், தனது எஜமானரை முற்றிலும் சார்ந்திருப்பவன் - எவ்விதமான வழியில் அவர் அவனைச் செலுத்தினாலும், நன்மையான எந்த ஒன்றையும் அவனால் கொண்டு வர முடியாது. நீதத்துடன் ஆட்சி செய்பவரும், மேலும் நேரான பாதையில் வழிநடத்தப்பட்டவருமாகிய ஒருவருக்கு அவன் சமமானவனா?
[16:75] ஒருவருக்கு உரிமையாகிவிட்ட, மேலும் முற்றிலும் ஆற்றலற்ற ஒரு அடிமையை, நல்ல வாழ்வாதாரங்களைக் கொண்டு நாம் அருள்பாலித்து, அதிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் தர்மம் செய்கின்ற ஒருவரோடு ஒப்பிட்டு கடவுள் உதாரணமாக எடுத்துரைக் கின்றார். அவர்கள் சமமானவர்களா? புகழ் அனைத்தும் கடவுள்-க்குரியது, அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
[16:77] வானங்கள் மற்றும் பூமியின் எதிர்காலம் கடவுள்-க்குரியது. அவரைப் பொறுத்த வரை, உலகின் முடிவு (அந்நேரம்) ஒரு கண் சிமிட்டலுக்கு அப்பால், அல்லது அதனை விடவும் மிக அருகில் உள்ளதைப் போன்ற தாகும். கடவுள் சர்வ சக்தியுடையவர்.