குர்ஆன் 16:75 — தேனீ
ضَرَبَ اللَّهُ مَثَلًا عَبدًا مَملوكًا لا يَقدِرُ عَلىٰ شَيءٍ وَمَن رَزَقنٰهُ مِنّا رِزقًا حَسَنًا فَهُوَ يُنفِقُ مِنهُ سِرًّا وَجَهرًا ۖ هَل يَستَوۥنَ ۚ الحَمدُ لِلَّهِ ۚ بَل أَكثَرُهُم لا يَعلَمونَ
ஒருவருக்கு உரிமையாகிவிட்ட, மேலும் முற்றிலும் ஆற்றலற்ற ஒரு அடிமையை, நல்ல வாழ்வாதாரங்களைக் கொண்டு நாம் அருள்பாலித்து, அதிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் தர்மம் செய்கின்ற ஒருவரோடு ஒப்பிட்டு கடவுள் உதாரணமாக எடுத்துரைக் கின்றார். அவர்கள் சமமானவர்களா? புகழ் அனைத்தும் கடவுள்-க்குரியது, அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
[16:74] ஆகையால், கடவுள்-க்கு உதாரணங்களை எடுத்துரைக்காதீர்கள்; கடவுள் அறிவார் அதே சமயம் நீங்கள் அறிய மாட்டீர்கள்.
[16:76] மேலும் கடவுள் இரு மனிதர்களின் உதாரணத்தை எடுத்துரைக்கின்றார்: ஒருவன் ஊமை, எந்த விஷயத்தையும் செய்யும் திறனற்றவன், தனது எஜமானரை முற்றிலும் சார்ந்திருப்பவன் - எவ்விதமான வழியில் அவர் அவனைச் செலுத்தினாலும், நன்மையான எந்த ஒன்றையும் அவனால் கொண்டு வர முடியாது. நீதத்துடன் ஆட்சி செய்பவரும், மேலும் நேரான பாதையில் வழிநடத்தப்பட்டவருமாகிய ஒருவருக்கு அவன் சமமானவனா?