Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:74 — தேனீ

ஆகையால், கடவுள்-க்கு உதாரணங்களை எடுத்துரைக்காதீர்கள்; கடவுள் அறிவார் அதே சமயம் நீங்கள் அறிய மாட்டீர்கள்.

[16:73] இருப்பினும், வானங்களிலோ, அன்றி பூமியிலோ அவர்களுக்காக எந்த வாழ்வாதாரத் தையும் கொண்டிராத, அன்றியும் அவர்களுக்கு எந்த ஒன்றையும் கொண்டு வழங்க முடியா தவற்றைக் கடவுள்-உடன் அவர்கள் வழிபடு கின்றனர்.

[16:75] ஒருவருக்கு உரிமையாகிவிட்ட, மேலும் முற்றிலும் ஆற்றலற்ற ஒரு அடிமையை, நல்ல வாழ்வாதாரங்களைக் கொண்டு நாம் அருள்பாலித்து, அதிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் தர்மம் செய்கின்ற ஒருவரோடு ஒப்பிட்டு கடவுள் உதாரணமாக எடுத்துரைக் கின்றார். அவர்கள் சமமானவர்களா? புகழ் அனைத்தும் கடவுள்-க்குரியது, அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.