Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:81 — தேனீ

மேலும் அவர் படைத்திருக்கும் பொருட்கள் மூலமாக, கடவுள் உங்களுக்காக நிழலை வழங்கினார், மேலும் மலைகளில் உங்களுக் காக புகலிடங்களையும் வழங்கினார், மேலும் வெப்பத்தில் இருந்து உங்களைக் காக்கும் ஆடைகளையும், போர்களில் நீங்கள் சண்டையிடும்போது உங்களைக் காக்கும் ஆடைகளையும் வழங்கினார். நீங்கள் அடிபணியக்கூடும் என்பதற்காக, உங்கள் மீதான அவருடைய அருட்கொடைகளை இவ்விதமாக அவர் பூர்த்தி செய்கின்றார்.

[16:80] மேலும் நீங்கள் வசிக்கக் கூடிய அசையா வீடுகளை உங்களுக்காகக் கடவுள் வழங்கினார். மேலும் பயணத்தின்போதும், இருப்பிடத்தில் தங்கியிருக்கும் போதும் அவற்றை நீங்கள் பயன்படுத்தும் வண்ணம் கால் நடைகளின் தோல்களினால் செய்யப்பட்ட எளிதில் தூக்கிச் செல்லத்தக்க வீடுகளை உங்களுக்கு அவர் வழங்கினார். மேலும் அவற்றின் கம்பளிகள், மிருதுவான உரோமங்கள், மற்றும் முடியிலிருந்து, நீங்கள் சிறிது காலத்திற்காக தட்டு முட்டுச் சாமான்களையும் மேலும் சொகுசுச் சாதனங்களையும் செய்து கொள்கின்றீர்கள்.

[16:82] அப்படியிருந்தும் அவர்கள் திரும்பிச் சென்று விடுவார்களாயின், பின்னர் உமது ஒரே பணி (தூதுச்செய்தியைத்) தெளிவாக ஒப்படைப்பதே.