குர்ஆன் 16:82 — தேனீ
அப்படியிருந்தும் அவர்கள் திரும்பிச் சென்று விடுவார்களாயின், பின்னர் உமது ஒரே பணி (தூதுச்செய்தியைத்) தெளிவாக ஒப்படைப்பதே.
[16:81] மேலும் அவர் படைத்திருக்கும் பொருட்கள் மூலமாக, கடவுள் உங்களுக்காக நிழலை வழங்கினார், மேலும் மலைகளில் உங்களுக் காக புகலிடங்களையும் வழங்கினார், மேலும் வெப்பத்தில் இருந்து உங்களைக் காக்கும் ஆடைகளையும், போர்களில் நீங்கள் சண்டையிடும்போது உங்களைக் காக்கும் ஆடைகளையும் வழங்கினார். நீங்கள் அடிபணியக்கூடும் என்பதற்காக, உங்கள் மீதான அவருடைய அருட்கொடைகளை இவ்விதமாக அவர் பூர்த்தி செய்கின்றார்.
[16:83] அவர்கள் கடவுள்-ன் அருட்கொடைகளை முழுவதும் அடையாளம் கண்டு கொண்ட பின்னர், அவற்றை மறுத்து விடுகின்றனர்; அவர்களில் பெரும்பாலோர் நம்ப மறுப்பவர் களாக உள்ளனர்.