குர்ஆன் 16:85 — தேனீ
வரம்பு மீறியவர்கள் தண்டனையைக் காணும் தருவாயில், அது மிகவும் தாமதம் ஆகி இருக்கும்; அது அவர்களுக்குக் குறைக்கப் படவும் மாட்டாது, அன்றி அவர்கள் அவகாசம் அளிக்கப்பட்டவர்களாகவும் இருக்க மாட்டார்கள்.
[16:84] ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் ஒரு சாட்சியை நாம் எழுப்பும் அந்நாள் வரும், அப்போது நம்ப மறுத்தவர்கள் (பேசுவதற்கு) அனுமதிக்கப் படமாட்டார்கள், அன்றி பிழைபொறுக்கப் படவும் மாட்டார்கள்.
[16:86] மேலும் இணைத்தெய்வ வழிபாடு செய்தவர்கள் அவர்களுடைய இணைத் தெய்வங்களைக் காணும் போது, அவர்கள், “எங்கள் இரட்சகரே, உம்முடன் நாங்கள் வழிபட்ட இணைத் தெய்வங் கள் இவர்கள் தான்” என்று கூறுவார்கள். பின்னர் அவர்களை எதிர்கொண்டு அந்த இணைத்தெய்வங்கள், “நீங்கள் பொய்யர் களாக இருக்கின்றீர்கள்” என்று கூறும்.