Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:89 — தேனீ

ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் ஒரு சாட்சியை அவர்களிலிருந்தே நாம் எழுப்பும் அந்நாள் வரும், மேலும் இந்த மக்களுக்குச் சாட்சியாக உம்மைக் கொண்டு வருவோம். எல்லா விஷயங் களுக்கும் விளக்கங்களை வழங்கவும் மேலும் வழிகாட்டலாகவும், கருணையாகவும், மேலும் அடிபணிந்தோருக்கு நற்செய்தியாகவும், இந்தப் புத்தகத்தை உமக்கு நாம் வெளிப்படுத்தி உள்ளோம்.

[16:88] நம்பிக்கை கொள்ள மறுத்து, கடவுள்-ன் பாதையை விட்டும் விரட்டுபவர்களுக்கு, அவர்களுடைய வரம்பு மீறல்களின் காரணத்தால், தண்டனையைக் கூட்டுவதன் மூலம் அவர்களுடைய தண்டனையை நாம் மேலும் அதிகரிப்போம்.

[16:90] கடவுள், நீதியையும், தர்மத்தையும், உறவினர்களை மதிப்பதையும் பரிந்துரைக் கின்றார். மேலும் அவர் தீமையையும், ஒழுக்கக் கேட்டையும், மேலும் வரம்பு மீறுதலையும் தடுக்கின்றார். நீங்கள் கவனத்தில் எடுக்கக் கூடும் என்பதற்காக, அவர் உங்களுக்கு அறிவுறுத்துகின்றார்.