குர்ஆன் 16:90 — தேனீ
கடவுள், நீதியையும், தர்மத்தையும், உறவினர்களை மதிப்பதையும் பரிந்துரைக் கின்றார். மேலும் அவர் தீமையையும், ஒழுக்கக் கேட்டையும், மேலும் வரம்பு மீறுதலையும் தடுக்கின்றார். நீங்கள் கவனத்தில் எடுக்கக் கூடும் என்பதற்காக, அவர் உங்களுக்கு அறிவுறுத்துகின்றார்.
[16:89] ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் ஒரு சாட்சியை அவர்களிலிருந்தே நாம் எழுப்பும் அந்நாள் வரும், மேலும் இந்த மக்களுக்குச் சாட்சியாக உம்மைக் கொண்டு வருவோம். எல்லா விஷயங் களுக்கும் விளக்கங்களை வழங்கவும் மேலும் வழிகாட்டலாகவும், கருணையாகவும், மேலும் அடிபணிந்தோருக்கு நற்செய்தியாகவும், இந்தப் புத்தகத்தை உமக்கு நாம் வெளிப்படுத்தி உள்ளோம்.
[16:91] கடவுள்-உடனான உங்களுடைய உடன் படிக்கையை அப்படியொரு உடன்படிக்கையை நீங்கள் செய்து கொள்ளும் போது அதனை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். அவற்றை நிறைவேற்றுவதாக (கடவுள் மீது) சத்தியம் செய்த பின்னர் உங்களுடைய உறுதி மொழிகளை நீங்கள் மீற வேண்டாம், ஏனெனில் உங்களுக்கு உத்தரவாதமளிப்பவராகக் கடவுள்-ஐ நீங்கள் ஆக்கி இருக்கின்றீர்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொன்றும் கடவுள்-க்குத் தெரியும்.