Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:91 — தேனீ

கடவுள்-உடனான உங்களுடைய உடன் படிக்கையை அப்படியொரு உடன்படிக்கையை நீங்கள் செய்து கொள்ளும் போது அதனை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். அவற்றை நிறைவேற்றுவதாக (கடவுள் மீது) சத்தியம் செய்த பின்னர் உங்களுடைய உறுதி மொழிகளை நீங்கள் மீற வேண்டாம், ஏனெனில் உங்களுக்கு உத்தரவாதமளிப்பவராகக் கடவுள்-ஐ நீங்கள் ஆக்கி இருக்கின்றீர்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொன்றும் கடவுள்-க்குத் தெரியும்.

[16:90] கடவுள், நீதியையும், தர்மத்தையும், உறவினர்களை மதிப்பதையும் பரிந்துரைக் கின்றார். மேலும் அவர் தீமையையும், ஒழுக்கக் கேட்டையும், மேலும் வரம்பு மீறுதலையும் தடுக்கின்றார். நீங்கள் கவனத்தில் எடுக்கக் கூடும் என்பதற்காக, அவர் உங்களுக்கு அறிவுறுத்துகின்றார்.

[16:92] தான் உறுதிபட நெய்ததை, பலமற்ற நூல் குவியலாக, அவிழ்த்து விட்ட நெசவாளி ஒருத்தியைப் போல இருக்காதீர்கள். ஒருவரை விட ஒருவர் மேன்மையைப் பெறுவதற்காக உறுதிமொழிகளை நீங்கள் துஷ்பிரயோகம் செய்வீர்களாயின், இதுவே உங்களுக்குரிய உதாரணமாகும். ஒரு பிரிவு மற்றொன்றைவிடப் பெரியதாக இருந்த போதிலும், கடவுள் இவ்விதமாக உங்களைச் சோதனைக் குள்ளாக்குகின்றார். நீங்கள் தர்க்கித்துக் கொண்ட ஒவ்வொன்றையும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று அவர் நிச்சயமாக உங்களுக்குக் காட்டுவார்.