Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:92 — தேனீ

தான் உறுதிபட நெய்ததை, பலமற்ற நூல் குவியலாக, அவிழ்த்து விட்ட நெசவாளி ஒருத்தியைப் போல இருக்காதீர்கள். ஒருவரை விட ஒருவர் மேன்மையைப் பெறுவதற்காக உறுதிமொழிகளை நீங்கள் துஷ்பிரயோகம் செய்வீர்களாயின், இதுவே உங்களுக்குரிய உதாரணமாகும். ஒரு பிரிவு மற்றொன்றைவிடப் பெரியதாக இருந்த போதிலும், கடவுள் இவ்விதமாக உங்களைச் சோதனைக் குள்ளாக்குகின்றார். நீங்கள் தர்க்கித்துக் கொண்ட ஒவ்வொன்றையும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று அவர் நிச்சயமாக உங்களுக்குக் காட்டுவார்.

[16:91] கடவுள்-உடனான உங்களுடைய உடன் படிக்கையை அப்படியொரு உடன்படிக்கையை நீங்கள் செய்து கொள்ளும் போது அதனை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். அவற்றை நிறைவேற்றுவதாக (கடவுள் மீது) சத்தியம் செய்த பின்னர் உங்களுடைய உறுதி மொழிகளை நீங்கள் மீற வேண்டாம், ஏனெனில் உங்களுக்கு உத்தரவாதமளிப்பவராகக் கடவுள்-ஐ நீங்கள் ஆக்கி இருக்கின்றீர்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொன்றும் கடவுள்-க்குத் தெரியும்.

[16:93] கடவுள் நாடியிருந்தால், அவரால் உங்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருக்க இயலும். ஆனால் அவர் வழிதவறிச் செல்வதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டோரைத் தவறான வழியில் அனுப்பி விடுகின்றார், மேலும் வழி நடத்தப்பட வேண்டும் என விரும்புவோரை அவர் வழி நடத்துகின்றார்*. நீங்கள் செய்த ஒவ்வொன்றைப் பற்றியும் நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.