குர்ஆன் 16:93 — தேனீ
கடவுள் நாடியிருந்தால், அவரால் உங்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருக்க இயலும். ஆனால் அவர் வழிதவறிச் செல்வதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டோரைத் தவறான வழியில் அனுப்பி விடுகின்றார், மேலும் வழி நடத்தப்பட வேண்டும் என விரும்புவோரை அவர் வழி நடத்துகின்றார்*. நீங்கள் செய்த ஒவ்வொன்றைப் பற்றியும் நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
[16:92] தான் உறுதிபட நெய்ததை, பலமற்ற நூல் குவியலாக, அவிழ்த்து விட்ட நெசவாளி ஒருத்தியைப் போல இருக்காதீர்கள். ஒருவரை விட ஒருவர் மேன்மையைப் பெறுவதற்காக உறுதிமொழிகளை நீங்கள் துஷ்பிரயோகம் செய்வீர்களாயின், இதுவே உங்களுக்குரிய உதாரணமாகும். ஒரு பிரிவு மற்றொன்றைவிடப் பெரியதாக இருந்த போதிலும், கடவுள் இவ்விதமாக உங்களைச் சோதனைக் குள்ளாக்குகின்றார். நீங்கள் தர்க்கித்துக் கொண்ட ஒவ்வொன்றையும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று அவர் நிச்சயமாக உங்களுக்குக் காட்டுவார்.
[16:94] உறுதியானதோர் பிடிமானத்தைப் பாதங்கள் அடைந்து விட்ட பின்னர் நீங்கள் மீண்டும் சறுக்கி விடாதிருக்கும் பொருட்டு, உங்களுக் கிடையில் உறுதிமொழிகளைத் துஷ்பிரயோகம் செய்யாதீர்கள் பின்னர் நீங்கள் துன்பத்திற்கு உள்ளாகி விடுவீர்கள். (மோசமானதொரு உதாரணத்தை அமைப்பதன் மூலம்) கடவுள்-ன் பாதையை விட்டும் விரட்டுவதன் விளைவு இத்தகையதே; பயங்கரமானதோர் தண்டனை க்கு நீங்கள் உள்ளாகின்றீர்கள்.