Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:94 — தேனீ

உறுதியானதோர் பிடிமானத்தைப் பாதங்கள் அடைந்து விட்ட பின்னர் நீங்கள் மீண்டும் சறுக்கி விடாதிருக்கும் பொருட்டு, உங்களுக் கிடையில் உறுதிமொழிகளைத் துஷ்பிரயோகம் செய்யாதீர்கள் பின்னர் நீங்கள் துன்பத்திற்கு உள்ளாகி விடுவீர்கள். (மோசமானதொரு உதாரணத்தை அமைப்பதன் மூலம்) கடவுள்-ன் பாதையை விட்டும் விரட்டுவதன் விளைவு இத்தகையதே; பயங்கரமானதோர் தண்டனை க்கு நீங்கள் உள்ளாகின்றீர்கள்.

[16:93] கடவுள் நாடியிருந்தால், அவரால் உங்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருக்க இயலும். ஆனால் அவர் வழிதவறிச் செல்வதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டோரைத் தவறான வழியில் அனுப்பி விடுகின்றார், மேலும் வழி நடத்தப்பட வேண்டும் என விரும்புவோரை அவர் வழி நடத்துகின்றார்*. நீங்கள் செய்த ஒவ்வொன்றைப் பற்றியும் நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.

[16:95] கடவுள்-க்கு முன்னால் உங்களுடைய உறுதி மொழிகளை அற்பவிலைக்கு விற்று விடாதீர்கள். நீங்கள் மட்டும் அறிந்திருந்தால், கடவுள் வசம் உள்ளவை உங்களுக்கு மிகவும் மேலானதாகும்.