குர்ஆன் 16:95 — தேனீ
கடவுள்-க்கு முன்னால் உங்களுடைய உறுதி மொழிகளை அற்பவிலைக்கு விற்று விடாதீர்கள். நீங்கள் மட்டும் அறிந்திருந்தால், கடவுள் வசம் உள்ளவை உங்களுக்கு மிகவும் மேலானதாகும்.
[16:94] உறுதியானதோர் பிடிமானத்தைப் பாதங்கள் அடைந்து விட்ட பின்னர் நீங்கள் மீண்டும் சறுக்கி விடாதிருக்கும் பொருட்டு, உங்களுக் கிடையில் உறுதிமொழிகளைத் துஷ்பிரயோகம் செய்யாதீர்கள் பின்னர் நீங்கள் துன்பத்திற்கு உள்ளாகி விடுவீர்கள். (மோசமானதொரு உதாரணத்தை அமைப்பதன் மூலம்) கடவுள்-ன் பாதையை விட்டும் விரட்டுவதன் விளைவு இத்தகையதே; பயங்கரமானதோர் தண்டனை க்கு நீங்கள் உள்ளாகின்றீர்கள்.
[16:96] உங்கள் வசம் உள்ள எதுவும் தீர்ந்து போகும், ஆனால் கடவுள் வசம் உள்ளவை என்றென்றும் நிலைத்திருக்கும். உறுதியாய் விடாமுயற்சியோ டிருப்பவர்களுக்கு நிச்சயமாக நாம் வெகு மதியளிப்போம்; அவர்களுடைய நன்னெறியான செயல்களுக்குரிய பிரதிபலனை நாம் அவர்களுக்கு வழங்குவோம்.