Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:96 — தேனீ

உங்கள் வசம் உள்ள எதுவும் தீர்ந்து போகும், ஆனால் கடவுள் வசம் உள்ளவை என்றென்றும் நிலைத்திருக்கும். உறுதியாய் விடாமுயற்சியோ டிருப்பவர்களுக்கு நிச்சயமாக நாம் வெகு மதியளிப்போம்; அவர்களுடைய நன்னெறியான செயல்களுக்குரிய பிரதிபலனை நாம் அவர்களுக்கு வழங்குவோம்.

[16:95] கடவுள்-க்கு முன்னால் உங்களுடைய உறுதி மொழிகளை அற்பவிலைக்கு விற்று விடாதீர்கள். நீங்கள் மட்டும் அறிந்திருந்தால், கடவுள் வசம் உள்ளவை உங்களுக்கு மிகவும் மேலானதாகும்.

[16:97] ஆணோ அல்லது பெண்ணோ, நம்பிக்கை கொண்ட நிலையில், எவரொருவர் நன்னெறியான செயல்களைச் செய்கின்றாரோ, அவர்களுக்கு நிச்சயமாக இவ்வுலகில் மகிழ்ச்சியானதொரு வாழ்வை நாம் வழங்குவோம், மேலும் (தீர்ப்பு நாள் அன்று) அவர்களுடைய நன்னெறியான காரியங்களுக்காக நிச்சயமாக அவர்களுக்குரிய முழுமையான பிரதிபலனை நாம் கொடுப்போம்.