குர்ஆன் 16:97 — தேனீ
ஆணோ அல்லது பெண்ணோ, நம்பிக்கை கொண்ட நிலையில், எவரொருவர் நன்னெறியான செயல்களைச் செய்கின்றாரோ, அவர்களுக்கு நிச்சயமாக இவ்வுலகில் மகிழ்ச்சியானதொரு வாழ்வை நாம் வழங்குவோம், மேலும் (தீர்ப்பு நாள் அன்று) அவர்களுடைய நன்னெறியான காரியங்களுக்காக நிச்சயமாக அவர்களுக்குரிய முழுமையான பிரதிபலனை நாம் கொடுப்போம்.
[16:96] உங்கள் வசம் உள்ள எதுவும் தீர்ந்து போகும், ஆனால் கடவுள் வசம் உள்ளவை என்றென்றும் நிலைத்திருக்கும். உறுதியாய் விடாமுயற்சியோ டிருப்பவர்களுக்கு நிச்சயமாக நாம் வெகு மதியளிப்போம்; அவர்களுடைய நன்னெறியான செயல்களுக்குரிய பிரதிபலனை நாம் அவர்களுக்கு வழங்குவோம்.
[16:98] குர்ஆனை நீங்கள் படிக்கும் பொழுது, விரட்டப்பட்ட சாத்தானிடமிருந்து நீங்கள் கடவுள்-இடம் அடைக்கலம் தேடிக் கொள்ள வேண்டும்.