குர்ஆன் 16:98 — தேனீ
குர்ஆனை நீங்கள் படிக்கும் பொழுது, விரட்டப்பட்ட சாத்தானிடமிருந்து நீங்கள் கடவுள்-இடம் அடைக்கலம் தேடிக் கொள்ள வேண்டும்.
[16:97] ஆணோ அல்லது பெண்ணோ, நம்பிக்கை கொண்ட நிலையில், எவரொருவர் நன்னெறியான செயல்களைச் செய்கின்றாரோ, அவர்களுக்கு நிச்சயமாக இவ்வுலகில் மகிழ்ச்சியானதொரு வாழ்வை நாம் வழங்குவோம், மேலும் (தீர்ப்பு நாள் அன்று) அவர்களுடைய நன்னெறியான காரியங்களுக்காக நிச்சயமாக அவர்களுக்குரிய முழுமையான பிரதிபலனை நாம் கொடுப்போம்.
[16:99] நம்பிக்கை கொண்டு மேலும் தங்கள் இரட்சகரிடம் பொறுப்பை ஒப்படைப்பவர்கள் மீது அவனுக்கு எந்த அதிகாரமும் இல்லை.