குர்ஆன் 17:10 — இஸ்ரவேலின் சந்ததியினர்
மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதோரைப் பொறுத்தவரை, வலிமிகுந்ததொரு தண்டனையை அவர்களுக்காக நாம் தயாரித்துள்ளோம்.
[17:9] இந்தக் குர்ஆன் மிகச் சிறந்த பாதையை நோக்கி வழிநடத்துகின்றது, மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்தும் நம்பிக்கையாளர் களுக்கு, அவர்கள் மகத்தானதொரு பிரதி பலனுக்கு தகுதியானவர்களாகி விட்டார்கள் என்ற நற்செய்தியைக் கொண்டு வருகின்றது.
[17:11] ஏதோ ஒரு நன்மைக்காகப் பிரார்த்திப்பதாக எண்ணிக் கொண்டு, தனக்குத் தீங்கிழைக்கக் கூடிய ஏதேனும் ஒன்றிற்காக மனிதன் அடிக்கடி பிரார்த்திக்கின்றான். மனிதன் பொறுமையற்ற வனாக இருக்கின்றான்.