குர்ஆன் 17:109 — இஸ்ரவேலின் சந்ததியினர்
அவர்கள் சிரம் பணிந்தவர்களாகவும், மேலும் தேம்பியழுதவர்களாகவும் தங்கள் முகவாய்க் கட்டைகள் மீது கீழே விழுவார்கள். ஏனெனில் இது அவர்களுடைய பயபக்தியை அதிகரிக் கின்றது.
[17:108] அவர்கள், “எங்கள் இரட்சகர் துதிப்பிற்குரியவர். இது எங்கள் இரட்சகரின் முன்னறிவிப்பைப் பூர்த்தி செய்கின்றது” என்று கூறுவார்கள்.
[17:110] “கடவுள் என அவரை அழையுங்கள், அல்லது மிக்க அருளாளர் என அவரை அழையுங்கள்; எந்தப் பெயரை நீங்கள் பயன்படுத்தினாலும், அழகிய பெயர்கள்தான் அவருக்குரியவை” என்று கூறுவீராக. உமது தொடர்புத் தொழுகைகளை(ஸலாத்) நீர் மிகவும் சப்தமாகவோ, அன்றி இரகசிய மாகவோ கூறவேண்டாம்; மிதமானதொரு தொனியைப் பயன்படுத்துவீராக.