குர்ஆன் 17:12 — இஸ்ரவேலின் சந்ததியினர்
இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக்கினோம். இரவை இருண்ட தாகவும், உங்களுடைய இரட்சகரிடமிருந்து வாழ்வாதாரங்களை நீங்கள் அதில் தேடிக் கொள்ளும் பொருட்டு பகலை பிரகாசமான தாகவும், நாம் ஆக்கினோம். இன்னும் உங்களுக்கு இது காலம் கணிக்கும் ஒரு வழிமுறையையும், கணக்கிடுவதற்கு ஓர் உபாயத்தையும் நிர்மாணிக்கின்றது. இவ் விதமாக நாம் ஒவ்வொன்றையும் விரிவாக விவரிக்கின்றோம்.
[17:11] ஏதோ ஒரு நன்மைக்காகப் பிரார்த்திப்பதாக எண்ணிக் கொண்டு, தனக்குத் தீங்கிழைக்கக் கூடிய ஏதேனும் ஒன்றிற்காக மனிதன் அடிக்கடி பிரார்த்திக்கின்றான். மனிதன் பொறுமையற்ற வனாக இருக்கின்றான்.
[17:13] ஒவ்வொரு மனிதனின் விதியையும் நாம் பதிவு செய்திருக்கின்றோம்; அது அவன் கழுத்தில் கட்டப்பட்டுள்ளது. மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப் படும் நாள் அன்று அவன் அணுகக்கூடிய ஒரு பதிவேட்டை நாம் அவனிடம் கொடுப்போம்.