குர்ஆன் 17:14 — இஸ்ரவேலின் சந்ததியினர்
உன் சொந்தப் பதிவேட்டைப் படி. இன்றைய தினம், உனக்குரிய கணக்காளனாக, நீயே போதுமானவன்.
[17:13] ஒவ்வொரு மனிதனின் விதியையும் நாம் பதிவு செய்திருக்கின்றோம்; அது அவன் கழுத்தில் கட்டப்பட்டுள்ளது. மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப் படும் நாள் அன்று அவன் அணுகக்கூடிய ஒரு பதிவேட்டை நாம் அவனிடம் கொடுப்போம்.
[17:15] வழி நடத்தப்பட்டவரெல்லாம், தன் சொந்த நலனிற்காகவே வழிநடத்தப்படுகின்றார், மேலும் வழிதவறிச் செல்பவரெல்லாம் தன் சொந்த கேட்டிற்காகத்தான் அவ்வாறு செய்கின்றார். எந்தப் பாவியும் மற்றெவருடைய பாவத்தையும் சுமக்க மாட்டான்.முதலில் ஒரு தூதரை அனுப்பி வைக்காமல் ஒரு போதும் நாம் தண்டிப்பதில்லை.