குர்ஆன் 17:15 — இஸ்ரவேலின் சந்ததியினர்
வழி நடத்தப்பட்டவரெல்லாம், தன் சொந்த நலனிற்காகவே வழிநடத்தப்படுகின்றார், மேலும் வழிதவறிச் செல்பவரெல்லாம் தன் சொந்த கேட்டிற்காகத்தான் அவ்வாறு செய்கின்றார். எந்தப் பாவியும் மற்றெவருடைய பாவத்தையும் சுமக்க மாட்டான்.முதலில் ஒரு தூதரை அனுப்பி வைக்காமல் ஒரு போதும் நாம் தண்டிப்பதில்லை.
[17:14] உன் சொந்தப் பதிவேட்டைப் படி. இன்றைய தினம், உனக்குரிய கணக்காளனாக, நீயே போதுமானவன்.
[17:16] எந்தச் சமூகத்தையேனும் நாம் அழிப்பதாக இருந்தால், அதன் தலைவர்களை அங்கு ஏராளமான சீர்கேடுகளைச் செய்வதற்கு நாம் அனுமதிப்போம். தண்டனைக்கு அவர்கள் தகுதியானவுடன், நாம் அதனை முற்றிலுமாக அழிக்கின்றோம்.