குர்ஆன் 17:2 — இஸ்ரவேலின் சந்ததியினர்
அதுபோலவே, மோஸஸிற்கு நாம் வேதத்தைக் கொடுத்தோம், மேலும் இஸ்ரவேலின் சந்ததி யினருக்காக அதனை: “நீங்கள் என்னுடன் எந்த இணைத் தெய்வத்தையும் ஒரு இரட்சகராகவோ மேலும் எஜமானராகவோ அமைத்துக் கொள்ள வேண்டாம்” என்கின்ற ஒரு வழிகாட்டியாகவும் ஆக்கினோம்.
[17:1] நம்முடைய அத்தாட்சிகளில் சிலவற்றை அவருக்குக் காட்டுவதற்காக, அதன் சுற்றுப் புறங்களை நாம் அருள்பாலித்திருந்த, அந்தத் தொலைவிலுள்ள சிரம்பணியும் இடத்திற்கு* (மக்காவின்) புனித மஸ்ஜிதிலிருந்து இரவுப் பொழுதில் தன் அடியாரை (முஹம்மது) வரவழைத்த அவர் துதிப்பிற்குரியவர். அவர் செவியேற்பவர், பார்ப்பவர்.
[17:3] அவர்கள் நோவாவோடு நாம் சுமந்து சென்றோரின் சந்ததியினர்; அவர் நன்றியுள்ள ஒரு அடியாராக இருந்தார்.